Tuesday, March 3, 2020

பயணம் தொடங்கியது - சிறுகதை - கார்த்திகேயன் A.M


 பயணம்  தொடங்கியது 

  'இந்த பொட்டல்  காட்டுல இன்னும் எம்புட்டு வருஷம்தான்  இருக்குறது, நாலு வருஷம் தண்ணி இல்ல , காடெல்லாம் பொளந்து கிடக்குது, இனிமே சோத்துக்கும் வழி இருக்காது , பேசாம மதுரை  பக்கம் போயிடலாமா'

மாரியின் கவலை அன்றைய எல்லா வீடுகளிலும் உள்ளதுதான்.

'சும்மா இருடி கிறுக்கு தனமா பேசாத , இந்த வாட்டி மழை பேயும், அப்புறம் எல்லாம் சரியாயிடும் ' 

கந்தசாமி அவளை சமாதானம் சொல்லி பேச்சை நிப்பாட்ட பார்த்தான் .

'கிழிக்கும், இந்த நாலுக்கும் சோறு போட வேண்டாம், பேச்சு வயசுக்கு வந்தாச்சு அவளையும் கட்டி குடுக்கணும் '

'காலையில ஆரம்பிகிக்காத, நான் இந்த குளத்தம் கரைக்குபோய்ட்டுவாரேன் '

'எதுக்கும் வக்கு இல்லனாலும் சீட்டு விளையாட மட்டும் கிளம்பியாச்சு'

அவன் குளத்தம் கரையில் உள்ள அரச மரத்தடியைதான் அப்படி சொன்னான், அந்த திண்டில் , ஊரில் உள்ள அநேக ஆண்கள் சீட்டு , ஆடுபுலி , தாயம் என்று விளையாடி மழைவர வேண்டி கொண்டுஇருந்தனர் .மற்ற ஆண்கள் எல்லாம் மதுரை , சென்னை , ஏன் பம்பாய் வரை கூட வேலை தேடி சென்றுவிட்டார்கள், அவர்களுக்கு இந்த ஆட்டம் பிடிபடவில்லை.

ஊரில் உள்ள எல்லா பெண்களும் கல் உடைக்கவும், கிணறு தோண்டவும் சென்றார்கள், கூலிக்கு கிடைக்கும் கோதுமையோ அரிசியோ அவர்களை உயிர் வாழ உதவியது.

கந்தசாமி, மாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், தனது ஆண்மையை கேள்வி கேட்டவளுக்கு அதை நிருபிக்க வேண்டியுள்ளதால், அவன் கை ஓயும் வரை அடித்தான்.

பேச்சி அவனுடைய வம்சத்தையும் ஆண்மையும் மேலும் பழித்தால் 

பாவம் அவனும் என்ன தான் செய்வான் இருந்த எல்லா பொருளையும் விற்று சீட்டு விளையாடினான், ஒரு நாளும் ஜெயித்த பாடு இல்லை.
சாயங்காலம் சாராயம் குடிக்கும் கடன் ஏறிக்கொண்டே சென்றது.

மொக்கை குடிசையின் ஓரம் நின்று அழுது கொண்டுஇருந்தான், அவனது தம்பி சந்தோஷமாக மண் அல்லி தின்றுகொண்டிருந்தான், பேச்சி தனது மாமனின் குடிசை வாசலில் நின்று என்ன செய்வது என தெரியாமல் கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.

மாரி கூந்தலை அல்லி முடிந்து கொண்டு தூரத்தில், வேலுப்பிள்ளையின் காட்டில் கிணறு தோண்டும் வேலைக்கு கிளம்பினாள்.
நாற்பது அடிவரை பல அடுக்கு பாறைகளை உடைத்தாகி விட்டது , ஈரத்திற்கான தடம் இல்லை.
மாரி வேகமாக நடந்தாள், அவளின் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து கொண்டு போனது , கல்யாணம் ஆன புதிதில் சந்தோசமாகதான் இருந்தார்கள்.கந்தசாமி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் எள்ளு , பருத்தி ,வேர்க்கடலை என சாகுபடி செய்து ,செழிப்பாக இல்லாவிட்டாலும் நிம்மதியான வாழ்க்கை அமைய உதவியது.


பேச்சி பிறந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து மூன்று ஆண் பிள்ளைகள் .காடு காய்ந்தது , அதனுடன் சேர்ந்து வீடும் அந்த ஊரும்.கிணறு இருப்பவர்களின் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்கள் . மூன்று வேலை கஞ்சி இரண்டு வேலை ஆனது.இப்பொழுது அரசாங்கம் கிணறு தோண்டுபவர்களுக்கு கொடுக்கும் கோதுமை தான் குடும்பத்தை காப்பாற்றுத்துகிறது, அந்த ஊர் மக்களெல்லாம் பிழைப்பு தேடி மதுரை, சென்னை என்று செழிப்பாக வாழ்வதாக வரும் செய்தி அவளை நிலையில்லாமல் ஆக்கியது , பேச்சி பெரியமனுஷியாகியது அவளை தூக்கமில்லாமல் செய்தது , சீட்டு கட்டு கந்தசாமிக்கு வீட்டைமறக்கடித்தது ,சாராயம் அவன்குடும்ப பாரத்தை குறைக்க உதவியது. பேச்சி கந்தசாமியை மீட்க முடியாத குழியில் இருப்பதாக நம்பினால், அது அவள் ஆழ்மனதை நெருப்புக்குழம்பாக கொதிக்க செய்தது. இந்த பிள்ளைகளின் சிரிப்பும் அவர்களின் எதிர்காலத்தின் நினைப்பும் அவளின் செயலில் அதை பிரதிபலிக்க செய்யாமல் செய்தது.மொக்கையனின் புழுதி படிந்த தலையும் வெற்று உடம்பும் ஐந்து வயது மழலை பேச்சும் அவளை கரைத்தது .

கந்தசாமியின் உதை இன்று அவளை எதுவும் இயலாதவளாக உணர செய்தது, வேலை முடிந்து கூரைப்பெட்டியில் அரிசி கொண்டுவந்தாள் ,

மொக்கையன் தாயை பார்த்த ஆனந்தத்திலும் சோறு கிடைக்க போகும் ஆசையிலும் குதித்து ஓடி வந்தான் , மாரியின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.

'ஏல பேச்சி எங்க போன' பக்கத்து குடிசையை பார்த்து கத்தினாள், அது அவளது தம்பி காசியின் வீடு, வெள்ளைக்காரனுக்கு வாகன ஓட்டியாக இரண்டாம் உலக போரில் பணிபுரிந்தவன்.
ஊரில் அனைவரும் அவனை மிலிட்டரி என்று கூப்பிடுவார்கள். பெரிதாக அவனுக்கு வேலையும் இல்லை தேவைகளும் இல்லை, அக்காவிற்கு தேவைப்படும் பொழுது பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து உதவுவான்.தான்தோன்றியாக சுற்றியதால் திருமணம் புரிதலும், குழந்தைகளும் இடைஞ்சல் என்று எண்ணினான்.இந்த ஊரில் ராணுவ கேப்டனுக்குஉண்டான அனைத்து மரியாதையும் அவனுக்கு  உண்டு , அதனால் இந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது .

'அங்க இங்கனு நின்னு வாய பக்காத போயி சுல்லி பெறகிட்டு வா' மாரி பேசிக்கொண்ட தன் குடிசைக்குள் சென்று அடுப்பை பற்ற வைத்தால்.

'ஏல மொக்கை, உனக்கு இன்னைக்கு அம்மா கஞ்சிக்கு துவையல் தரேன், போயி ஓட கரையில இருக்குற   மரத்துல இருந்து காயிகளை பரிச்சிட்டு வா ' உற்சாகத்தில் இருந்த மொக்கைக்கு இது மேலும் குஷிப்படுத்தியது.

மொக்கை ஓடிப்போய் அந்த அரளி செடியில் இருந்த காய்களை பறித்து கொண்டு வந்தான்.

மாரி அனைவருது கிண்ணத்துலயும் கஞ்சி ஊத்தினால் .

கந்தசாமி இன்னும் வீடு திரும்பவில்லை, சாராயம் குடித்த போதையில் தெரு முனையில் விழுந்து கிடந்தான்.  இன்னும் ஒரு மாதத்தில் சாராயக்காரியின் பெயருக்கு அவனது காடெல்லாம் மாறி போகும், அதை பற்றி கவலைப்படும், நிலையில் அவன் இல்லை.

மாரி துவையலை அனைவருக்கும் ஒரு உருண்டை பிடித்தால், முதலில் அவள் உண்டாள், மொக்கையன் கண்களில் அவனுக்கு வாழ்கை மீது இருக்கும் நம்பிக்கையும் ஆனந்தமும் தெரிந்தது.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது, முதல் உருண்டையை அவள் உண்டாள், மொக்கையன் கையை நீட்டினான். வாழ்கை பிட்சை கேட்பது போல் தோன்றியது அவளுக்கு.

அவனது தலையில் ஓங்கி கொட்டினால், மற்ற அனைத்து உருண்டைகள அவளே முழிங்கினாள் . பேச்சி புரிந்தும் புரியதுமாக முழித்து கொண்டு இருந்தால்.மொக்கையனை மாரி சமாதானம் செய்து தூங்க செய்தால்.

அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். கந்தசாமி இருள் ஏறிய பிறகு விடு வந்தான், மாரியை சமாதானம் பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கையில் .

'எடி மாரி, இந்த கஞ்சி உத்துடி' என்று அவளை உலுக்கினான், அவனது மொத்த போதையும் தெளிந்தது. தனது வாழ்க்கையே பாரமாக உணர்ந்தான்.

காசி மறு நாள் , ஆலமரத்தில் விழுதாய் தொங்கிய கந்தசாமியியை இறக்கினான்.

முப்பதாவுது நாள் பேச்சி , கருப்பசாமி கோயில் வாசலில் மணமகளாய்  நின்றாள், நொண்டி பால்சாமி அவளுக்கு வாழ்கை தந்தான்.

காசி அன்று இறவு தனது மருமகன்களை தூக்கி கொண்டும், பிடித்து கொண்டும் , நடக்க ஆரம்பித்தான், ஊர் வெளியே சென்று அங்கு இருந்த கருப்பசாமி கோயில் வாசலில் நின்றன்.
அங்கு கோயில் கதவு சாத்தி கிடந்தது, அங்கு நின்று சாமி கும்பிட்டு தரையில் இருந்த மண்ணை அள்ளி நெற்றியில் பூசினான்.

ஊரை விட்டு வெளியே செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தான், அவர்களை வழியனுப்பவோ வரவேற்கவோ எந்த ஊரும் இல்லை

No comments:

Post a Comment