பொது குடிகளிடமிருந்து வேறுபட்டு
இடைவெளியுடன் தங்களை இன்றளவும் வேறுபாடான தனித்துவமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு உயிர்ப்புடன் தங்களை காப்பாற்றிக் கொண்டு வரும் ஒரு குழு அல்லது ஒரு
சமுதாய மக்களை பழங்குடிகள் என்று அழைக்கிறோம்
உலகில் சுமார் 15 கோடி
மக்கள் பழங்குடிகள் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது ஆனால் பழங்குடி மக்கள் தினந்தோறும்
பல்வேறு வகையான நேரடியாக மறைமுகமான தாக்குதலை எதிர் நோக்கி வருகிறார்கள் அம்மக்களின்
மண் கலாச்சாரம் பண்பாடு மீது நாள்தோறும் சிதைவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது தாங்கள்
வாழ்ந்த மண்ணில் இருந்து துரத்தப்படுகிறார்கள் சட்டம் என்ற பெயரில் அவர்களுக்கு புரியாத
மொழியில் நாள்தோறும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்
இப்படிப்பட்ட காலகட்டத்தில்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா சித்தி பழங்குடிகளை பற்றிய ஒரு செய்தியைப் பார்ப்போம்
இம்மாவட்டம் கர்நாடகத்தில் தனிச்சிறப்புமிக்க மாவட்டம் சாதி
மத நம்பிக்கைகள் இவர்கள் பேசும் மொழி துணை மொழிகள் உணவு வகைகள் போன்றவை தனிச்சிறப்பு
மிக்கவை இந்த பகுதியில் ஹவாய்க்கர் , கொட சரஸ்வதர், லிங்காயத்து ,ஆலத்தூ ஒக்கலிகர்,
சித்தி, நாம் தந்திரிகள், மற்றும் சன்னி முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள்
போன்ற முக்கிய சாதி மக்களை உள்ளடக்கிய மாவட்டமாகும்.
இம்மக்களிடையே சித்தி பழங்குடி மக்கள் மிகத் தொன்மையான
மதிப்புமிக்க பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ,
சித்தி பழங்குடிகளின் உடலமைப்பு
உணவு பழக்க வழக்கங்கள் நம்பிக்கை போன்றவர்களை ஆய்வு செய்தால் அவர்கள் ஆப்பிரிக்க நாடான
மொசாம்பிக், தான்சானியா பிரதேச பாண்டு பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று
தெரிய வருகிறது.
இந்தப் பழங்குடிகளை போர்ச்சுகீசியர்கள்
அடிமைகளாக பிடித்து வந்து கோவாவில் விற்பனை செய்து வந்தது ஆய்வின் அடிப்படையில் சில
வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி படுத்தினாலும் அவர்கள் பின்னாட்களில் குழுவாக ஒன்று சேர்ந்து
அடர்ந்த காடுகளில் போய் எப்படி வாழத் தொடங்கினார்கள் என்று இன்றுவரை அறியமுடியாத விஷயமாகவும்
ஆச்சரியமாகவும் உள்ளது.
சித்தி பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள்
இந்தியாவில் இருக்கும் முக்கிய பழங்குடிகளை விட தனித்துவமான ஒரு அம்சத்தை நாம் கவனிக்க
வேண்டும் அது ரைஸ் (Race) அடையாளங்களுக்கு சம்பந்தப்பட்டது
இந்திய பழங்குடிகளைவிட சித்திகள்
முற்றிலும் வேறு பட்டவர்கள் என்று சொல்ல அவர்களின் இன அடையாளங்கள் தான்
இவர்கள் மூல ஆப்பிரிக்க கண்டத்தைச்
சேர்ந்த நீக்ரோ இனத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும் இன்றளவும் மிக தூய்மையாக காப்பாற்றி
வருகிறார்கள் என்பது மிக ஆச்சரியமான செய்தி தமிழகத்திலுள்ள kader இருளர் மற்றும் புழையர்
போன்ற பழங்குடிகளை விட மாறுபட்ட பழங்குடிகளாக உள்ளனர்.
சித்தி பழங்குடிகளை போர்ச்சுக்கீசியர்கள்
ஆடுமாடுகளைப் போல 1619 ஆம் ஆண்டு விற்பனை செய்தார்கள், ஸ்பார்ட்டகஸ் - க்கு நிகரான ஒரு அடிமை வியாபாரம் கோவா துறைமுகங்களில் நடந்ததாக சொல்லப்படுகிறது
இப்படி விற்பனை செய்யப்பட்ட சித்தி அடிமைகளை அங்குள்ள landlord சமூகத்தில் இந்து பட்டர்கள்
கிறிஸ்துவர் முஸ்லிம் பண்ணையார்கள் வாங்கிச் சென்றார்கள்
கோவா கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தையும்
இஸ்லாத்தையும் இந்துக்கள் இந்து மதத்தையும் அம்மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தார்கள்
தங்கள் சொந்த அடையாளங்களை தனித்துவமான ஆப்பிரிக்க பழங்குடிகளின் வழிபாட்டு முறையையும்
பழக்கவழக்கங்களையும் இதன் மூலம் அழிக்க நினைத்தர்கள்
உலகில் மிகப்பெரிய மூன்று
மதங்களில் சித்தி சமூகம் உடைந்து போனாலும் பழங்குடிகளின் மரபில் ஊறிப்போன பழங்குடியின
ஒற்றுமை அவர்களிடம் இன்றளவும் காணப்படும் சிறப்பு என்னவென்றால் இந்த மூன்று மதத்தினரும்
இன்றளவும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக உள்ளனர் வெறும் விருந்துகள் மட்டுமல்லாமல்
திருமண உறவுகளும் கூட மூன்று மதத்தினரும் கலந்தே எளிமையாக நடந்துவிடுகிறது
மதவாதிகள் அவர்களை மதமாற்றம் செய்ததுடன் சரி இவர்களை
மனிதர்களாக இன்றளவும் பார்க்கப்படுவதில்லை ஆனால் சித்திகள் தனித்து காணப்பட்டாலும்
கலை, இசை, பண்பியல் விஷயங்களில் கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து சித்திகளிடம் ஒரே பொது தன்மையுடன் காணமுடிகிறது
சித்தி பழங்குடி மீது மதங்களை
கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டது என்பதற்கு அவர்களாகவே மதங்களை தழுவி கொள்ளவில்லை என்பதற்கு
பல ஆய்வு அறிக்கைகள்தெளிவுபடுத்துகிறது
நிறத்தில் செயல்பாட்டில்
மற்றும் கலாச்சார விஷயங்களில் திமிரு பிடித்தவர்களாக நடந்துகொண்ட மேல்சாதி மெஜாரிட்டி
மதத்தின் மக்கள் என்றைக்கும் சித்திகளை தன் மக்கள் என்று பார்க்கப்படுவதும் இல்லை அரவணைத்துக்
கொண்டதும் இல்லை இந்து தர்மம் ஆகட்டும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தர்மம் ஆகட்டும்
சித்திகளின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே வேலை செய்கிறது இதை விட்டால்
சித்திகளிடம் மதங்கள் பெரிய பாத்திரங்கள் எதையும் வைகிக்கவில்லை இதனால்தான் சித்திகள்
குடும்பத்தில் விநாயகா கணபதி' நாகேஷ் , தாமஸ், பிரான்ஸ் , பர்சு ,மொஹமத் என்று
ஒரே குடும்பத்தில் பல மதத்தின் பெயர்கள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது
மதத்தின் பெயரால் சித்திகள்
இன்னொரு சித்தியை பார்க்கப்படுவதில்லை அடிப்படையில் சித்திகள் நாம் என்ற உணர்வே மேலோங்கி
உள்ளது இம்மூன்று மதங்களும் இம் மக்கள் மீது திணிக்கப்பட்ட தங்கள் அடையாளங்களை அழிக்க
நினைத்தாலும் அவர்கள் மரபுரீதியாக இம்மூன்று மதங்களுடன் பின்னிப் பணியவில்லை
இப்படி ஏகாதிUத்திய சக்திகளால்
மதவாதிகளாலும் சித்திகளை தங்கள் வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக பிடித்து வந்து
ஒரு மாறுபட்ட சமூகத்தில் கொண்டு வந்து விட்டாலும் தங்களுடைய தனித்துவத்தை இன்றளவும்
காப்பாற்றிக் கொண்டு காடுகளில் வாழும் சித்திகள் ,பழங்குடிகளுக்கு ஒரு முன்னுதாரணம்.
சித்திகள் மற்றும் வனம்:-
மற்ற பழங்குடிகளை விட சித்திகளிடமும் உடல் நலம் Uற்றிய விசியத்த்தில்
இருக்கும் நம்பிக்கைகள் வனத்தில் உள்ள மூலிகைகளுடன் சம்மந்தப்பட்டது. உதாரணம், வனத்தில்
உள்ள ஒரு வித வாசனை வேர் சளி, காய்ச்சல், உடல் பலவீனமான விசியத்துக்கு சம்மந்தமாக பயன்படுத்தப்
Uடுகிறது. இதே போல வனத்தில் உள்ள தாட்சினி சக்கை என்று அவர்கள் மொழியில் சொல்லும் ஒரு
மரத்தின் பட்டையை எடுத்து Uல்வலி, ஈர்கள் வீக்கம் போன்ற நோய்க்கு Uயன்படுத்துகிறார்கள்
இப்படி வனத்துக்கும் சித்திகளின் வாழ்வியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மொழி மற்றும் தார்மீக நம்பிக்கைகள்:-
சித்திகள் பேசும் மொழி அவர்களுடைய தனி பண்புடன் ஒரு துணை மொழியை உருவாக்கிக்
கொண்டார்கள், அம்மொழி மராட்டிய , மற்றும் கொங்கணி வார்த்தைகளை கொண்ட கன்னட குரல் அமைப்பில்
பேசப்படும் மொழியn க உள்ளது.
அவர்கள் பேசும் போது சில சமையம் கன்னட மொழிச் சொர்க்
களை அப்படியே பயன் Uடுத்துகிறார்கள்,உதாரணம்Gode- சுவர் Beli, Anna-.அண்ணா ,Angadi-. கடை,போன்ற ஒலியமைப்பை கொண்ட வார்த்தைகளை அதன் மூல அர்த்தத்தையே மைய்யமாக
கொண்டு பேசுகிறார்கள்.
மரட்டிய எழுத்துக்களையோ , கொங்கணி எழுத்துக்களையோ
இம்மக்கள் அறிந்திருக்க வில்லை
இன்றைய தலைமுறை குழந்தைகள்
கன்னடத்தை பாட மொழியாக படிப்பதால் கன்னட மொழியை மட்டுமே படிக்கவும் எழுதவும் திறன்
கொண்டவர்களாக உள்ளனர்.
சித்திகளின் கலாச்சாரம் மிக எளிமையாதும். இவர்களின் வாழ்வியல் முழுமைக்கும்
தென் கன்னட மாவட்த்தின் வனத்தின் இயற்கையின் பிரதிபலிப்பை கான முடிகிறது.
சித்திகளின், கடவுள், மத
நம்பிக்கைகள், நீதி, பண்பியழ், பாவம் - புண்ணியம், மற்றும் நீதி பரிபாலனைகள் அனைத்தும்
பல நூறு வருடங்களாக காடுகளிலேயே ஊரிப் போனதால் தான் இவர்களுடைய பண்புகளை இயற்கையே உருவாக்கிக்
கொடுத்துள்ளது.
சித்திகள் - கடவுள்
சித்திகளின் கடவுள்
"சித்தி நசம், வேட்டை நாசம்" என்ற கடவுலைப் Uற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சித்தி நாச கடவுள் சித்திகளின் வாழ்வியலில் மிக முக்கிய பங்காற்றும்
கடவுள்.இந்த கடவுள் காய்ந்த தேங்கம் வடிவத்தில் உள்ளது, அதாவது காய்ந்த தேங்காயை கொண்டு
வீட்டின் உச்சத்தில் கட்டி வைத்து அதை பூஜை செய்யும் சம்பிரதாயத்தை கொண்டுள்ளார்கள்.
இந்த தேங்காய்க்குள் தங்கள்
முன்னோர்களின் ஆத்மா குடிகொண்டிருப்பதாக, அப்படி குடி கொள்வதால் குடும்ப வளர்ச்சிக்கு
எப்போதும் உதவிகரமாக இருப்பார்கள் என்று ஆழமாக நம்புகிறார்கள்
எல்ல சித்தி வீடுகளிலும்
இந்த தேங்காய் வழிபாடு உள்ளது.
மானுடவியல் ஆய்வாளர் திரு
எல்.எல். ஹெக்கடே அவர்களின் கூற்றுப்படி சித்திகள் தென் கன்னட மாபட்ட காடுகளுக்கு வந்த
போது மத வழிபாட்டு சடங்கு காரணங்களால் பாலியான வாளிபன் ஒருவனே சித்தி நாசம் என்று வழிபடுகிறார்கள்
என்று எழுதுகிறார்.
ஆனால் சித்தி நாசம் என்ற வழிபாட்டு முறை கிராம சிறு
கடவுள்களுக்கு மாற்றான கற்பனையாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
இரண்டாவதாக சித்திகளிடம்
மற்றொரு கடவுளும் உள்ளது அதற்கு பெயர் (Jattiga god) சட்டிக சாமி என்று பெயர். இந்த
சாமி தென் கன்னட மாட்டத்தில் உள்ள மற்ற பழங்குடிகரும் இதை வழிபடுகிறார்கள்
இச்சாமி கிராமங்களின் எல்லைச்சாமி
யாவும், காட்டு விலங்குகளிடமிருர்தும் திருடர்களிடமிருந்தும் தங்கள் விவாசய உற்பத்தியை
காப்பாற்றும் தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது.
விவசாய பூமியின் கடைக்கோடியிலும்,
வனமும் _ கிராமமும் இனையூம் எல்லைப்பகுதியில் கருப்பு கல் நட்டு அதை ஜட்டிகசாமி
என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.
திருமண முறை :-
சித்திகளின் திருமண முறையில்
சுற்றி இருக்கும் சமூக்கத்தி தாக்கம் இருந்தாலும், நடைமுறையில் மிக எளிமையான திருமண
சடங்குகள் உள்ளது. சித்திகளின் மூன்று மதத்திலும் இன்றைக்கும் வரதட்சனை என்ற நோய் கிருமி இவர்களிடம் காணப்படவில்லை
திருமணம் என்பது ஆண் - பெண்
இனைப்பு மட்டும் அல்லாமல் இரண்டு சித்திகளின் குடும்பங்கள் இணையும் விழாவா உள்ளது,
ஒரு வேலை திருமணம் செய்து கெண்ட சித்தி இளைஞர்கள் பிரிந்து சென்று விட்டாலும் இரண்டு
குடும்பங்களிலும் எவ்வித விரிசல்களும் ஏற்படுவதில்லை, அதே குடும்பங்களில் அடுத்த திருமண
சம்மந்தகளும் நடைபெறுகிறது.
சித்திகளின் திருமண முறை 4 நாட்கள் நடைபெருகிறது.
வரதட்சனை முறை ஒன்று இல்லை என்றால் பெண் வீட்டில் இருந்து கொஞ்சம் அரிசி, _ பருப்பு,
- துணிகள், - கொட்ட முத்து(ஆமணக்கு) சீரகம் போன்றவைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
இலக்கியம்:-
சித்திகளின் இலக்கியம்
என்பது மிக தெளிவாக உள்ளது. அடிமைத்தனித்துக் கு எதிராக வாய் மொழி இலக்கியமாக இன்றளவும்
உள்ளது. அங்குள்ள காப்பி தோட்ட கவுடர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான பாடல்களும்,
தங்கள் வம்சத்தை கட்டுப்படுத்த, அடக்க நினைக்கும் மேல் சாதி பிராமணர்களை எதிர்த்து
பாடல்களும் கதைகளும் உள்ளது.
இந்த கதைகளில் வர்க்க எதிர்போராட்டமோ, மேல்சாதிக்கு எதிரான போராட்டமோ
இல்லாமல் இருப்பதுடன் எங்கும் வன்மங்கள் பிரதிபலிப்பதில்லை, மாறாக தங்கள் வாழ்க்கையின்
வலிகளை பிரதிபலிக்கும், மனக்குமரல்களை, ஆழ்மனதில் உரைந்து கிடக்கும் நிராசைகளை கதை,பாடல்
வடிவத்தில் சொல்லப் Uடுகிறது.
இந்த நூற்றாண்டில் மாற்று மத தொடர்பால் "குலத்தாட்டு " என்று
அம்மக்களால் அழைக்கப்படும் (Cross breed) கலப்பு நீக்ரோக்கள் உண்டாகி இந்திய மக்களைப்
போல சிலர் தென்பட்டாலும் சித்திகள் தூய்மையான உடலமையும் பண்பியலையும் சிதையாமல் சிதராமல்
இன்னும் காப்பாற்றியூம் வருகிறார்கள்.
சொந்த நிலம், உறவுகளை விட்டு
பரதேசிகளாக அடிமைகளாக மாற்று மண்ணில் வாழ்ந்து வந்தாலும் சித்திகள் பன்பியலில் பெரும்
பணக்காரர்களாக மற்ற சமுகத்துக்கு கற்றுக் கொள்ள வாழ்க்கை தத்துவங்களை , அறிவை , அகிம்சையை
, சமத்துவத்தை வைத்துள்ளார்கள்.
நாம் கற்றுக் கொள்ள தயாரா?
No comments:
Post a Comment