Monday, February 7, 2022

விண்மீன்கள் எனும் வான பூக்கள் - கட்டுரை - தமிழ் குமரன் துரை

நட்சத்திரங்களை எண்ணுவதை விட்டு விட்டு ரசிக்க தொடங்குங்கள்

                       - நா. முத்துக்குமார்

நட்சத்திரங்கள் என்று கூறுவதைவிட விண்மீன்கள் என்று கூறுவதை நான் விரும்புகிறேன்.

இறைவனின் ரசனையின் வெளிப்பாடுதான் விண்மீன்கள்
 அவை ஒரு அற்புத சாத்தியத்தை மானுடத்திற்கு வழங்குகிறது
ஒவ்வொரு முறையும் விண்மீன்களின் முழுமையை விவரிக்க மோதிரம் தருணத்தில் தோற்றுப்போகிறேன்.
 ஆயினும் அவற்றைத் தோல்வியாக நான் கருதவில்லை இயற்கையின் படைப்பை அதன் முழுமையை அறிந்தவர் தான் யார்!

இயற்கை பேராற்றலின் அழகியல் வெளிப்பாட்டின் உச்ச தன்மையே அவ் சுடர்கள.

பொதுவாக பூமியை நிலையான வற்றுக்கும் வானத்தை நிலையற்ற தன்மைக்கும் உவமை கூறுவர்...
ஆனால் இங்கு மண்ணில் பூக்கும் பூக்கள் உதிரும், விண்ணில் உள்ள அப் பூக்கள் என்றும் உதிர்வதில்லை..
அவை நிரந்தரமானவை....✨
 மண்ணில் உள்ள இப்பூக்கள் சூரியனின் தன்மையை தன்னுள் கொண்டுள்ளது போல...
 அந்த வின்பூக்கள் நிலவின் செறிவை தன்னுள் கொண்டுள்ளது. 

வான் பூக்கள் ✨ 

 முடிவிலா பரவெளியில் விரிந்து
  கிடக்கும் வென்சுடர்களே -
                     அன்பு செய்கிறேன்
   பூலோக மாந்தர் கவலை மறக்க எம் இறைவன் படைத்த அற்புதமே -
                        அன்பு செய்கிறேன்
    வான் எனும் தோட்டத்தில் பூத்த 
       அதிசய மலர்களே -
                         அன்பு செய்கிறேன்
அன்னை குசையின் அற்புத உறவுகளே 
                         அன்பு செய்கிறேன்
 அன்பைவிட பிரிதொரு அறமும் உண்டோ
       இப்புவித்தனில் ....

விண்மீன்களை ரசிப்பவன் 
வாழ்வை ரசிக்கிறான் ...
எளிய பூச்சிகளை ரசிக்கிறான் காட்டில் மலரும் பூக்களை ரசிக்கிறான்
 தெரு நாய்களை ரசிக்கிறான்
  வெற்று வானை ரசிக்கிறான்...
அவன் ரசனை விண்மீன்களை போல எல்லையற்றதாகிறது....
இந்த 
நிதர்சனம் புரியதவர்களே 
வாழ்வின் மீது குறைகளை கூறுவர்..

வானில் உள்ள விண்மீன்கள் பவானி தன்மையும் தனக்குள் கொண்டுள்ளன

 அந்த வானின் தன்மையே 
 கற்களில் உள்ள கடுமை...
 நீரில் உள்ள குழைவு...
 தீயில் உள்ள வீரியம்...
 மனதில் உள்ள அறமும்...

வாழ்வின் மீது குறை கூறுவோர் எவராயினும் ...
அவர்கள் கோடை இளவேனில் காலத்தில் அவ்விருள் விலகாத காலை வேளையில் நன்கு தளிர்த்து பூத்திருக்கும் வேப்பமரத்தடியில் நின்று 
விண்மீன்களை ரசித்திருக்க 
மாட்டார்கள்  
அப்படி ரசித்து இருந்தால் வாழ்வைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்வர்..

வாழ்வை ரசிக்க வேண்டுமாயின் 
நம்மை சுற்றியுள்ள சிறிய விஷயங்களை ரசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையே சிறிய விஷயங்களால் ஆனது....

    தமிழ் குமரன் துரை

No comments:

Post a Comment