Wednesday, March 17, 2021

இரம்யா படைப்புகள்

 

1.   பயணக் கட்டுரை: இடைக்காட்டூர்-இராமெஸ்வரம்

https://www.jeyamohan.in/140662/

 

2.   அகழி மின்னிதழ்-பெண்கள் நெஞ்சில் மூண்ட கனல்

https://www.jeyamohan.in/144234/

 

3.   முதற்கனல் என் தத்துவ நோக்கில்

https://www.jeyamohan.in/143304/


கவிதைகள்

சேரவியலா வார்த்தை


ஆதியிலே வார்த்தை இருந்தது.
அவ்வார்த்தை மனிதனானது.

அவனுக்குள்ளிருந்த வார்த்தைக்காய் காத்திருந்தேன்.
காத்திருப்பு முற்றி அவனை நோக்கி வார்த்தைகளை ஏவியபடியே..

ஒன்று கூட அவன் சிந்தையை எட்டாமல் விலகிச் சென்றது.
அதீத வார்த்தை நஞ்சாகக்கூடுமென நினைந்து மௌனமானேன்.

பல யுகங்கடந்து அவன் சிந்தை சலனமுற்று ஓர் வார்த்தை கருவுற்றது.
அதன் ஜனன சிறு அசைவுகளையுங்கூட சிலாகித்திருந்தேன்.

அது பிறந்து புறப்பட்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
கண்களை மூடி தியானித்திருந்தேன்.
அது என்னை விட்டு விலகி வேறோரிடம் சேர்ந்தது.

என் வார்த்தையின் குவியலாலேயே மூழ்கிப் போய் இறந்துவிட்டிருந்தேன் என்றறியாத நான், மீண்டும் அவனின் வார்த்தைக்காய் காத்திருந்தேன்.

என்றுமே என்னை வந்து சேரமுடியா வார்த்தை என்றறியாதவளாய்.

---**----

 ”தொலைந்துவிட்ட நீயும் நானும்

அந்த என்னைத் தேடிக் கொண்டிருப்பவனிடம்

எப்படிச் சொல்லி விளங்க வைப்பேன்

நானே கடந்துவிட்ட என்னை நீ

தேடிக் கொண்டிருக்கிறாய் என்று

 

சொல்லும் சொல் கேட்கும் தூரத்தில் கூட

நீயில்லை

இந்த என்னை விட்டிருந்த உன்

தொலைவின் தூரம் கனக்கிறது

 

நாதியற்றுப் போய் நடக்க ஆரம்பித்தேன்

என்றோ உன்னிடமிருந்த அந்த

அன்பின் தருணங்களுடன்

கதைபேசிக்கொண்டே மெல்ல

 

சொல்லப்போனால்

தொலைந்துவிட்டிருப்பது

நீயும் நானும் தான்.

---***----

 ”சத்

 

சாக்கடையோரத்தில்,

அந்த வயோதிக இளைஞன்.

 

பிச்சை பெறும் எண்ணம்

அந்தக் கண்களிலும், சிந்தையிலும் இல்லை.

 

சூனிய வறுமையைத் தாங்கிய உடலும்

பாதுகாப்பற்ற உணர்வுடன் கூடிய பைக்கட்டும் சேர்ந்து,

சத் என்றிருந்தார்.

 

எதிர்பாராது, திபுதிபுவென்று கொட்டிய மழையை

குடைகொண்டு சந்தித்தார்.

தடுத்ததாய் நினைத்த மழை

அவரையும், பைக்கட்டையும் நனைத்திருந்தது.

அப்பொழுதும் சத் என்றிருந்தார்.

 

இந்த பிசுபிசுத்த இரவை எங்கு களிக்க?

இராச்சோறு எங்கே உண்ண?

என்ற சிரத்தை எண்ணங்களற்று

சத் என்றிருந்தார்.

 

எங்கள் கண்கள் எதிர்பாராத விதமாய் சந்தித்தன,

இன்னும் சற்று ஆழமாக அவரை சந்திக்க எத்தனித்தபோது,

என்னைச் சுமந்திருந்த உந்தி

எங்கள் சந்திப்பை அகற்றியிருந்தது.

 

நகர்ந்தபின் யோசிக்கிறேன்.

என்னைப்பற்றி, அவர் என்ன சிந்தித்திருப்பார்

No comments:

Post a Comment